ஆஸ்திரேலியாவில் இந்து கடவுளை அவமதிப்பது என்பது வாடிக்கையாகி விட்டது . சமீபத்தில் கடவுள் லட்சுமியின் படத்தை நீச்சல்உடையில் பொறித்து சிட்னியில் நடந்த பேஷன்ஷோவில் உலாவிட்டனர். அதற்கு இந்து அமைப்புகளின் கடும் போராட்டத்துக்கு பிறகு மன்னிப்பு கேட்கபட்டது.

இந்நிலையில் விநாயகரையும் அவமதித்து உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஒரு நிறுவனம் ஒரு காமெடிநாடகம் நடத்த ஏற்பாடு செய்து உள்ளது. அதில் இந்துகடவுள் விநாயகரை கிண்டல் கேலி செய்து காட்சி வடிவமைக்கபட்டுள்ளது.

அதாவது விநாயகரை கைதுசெய்யும் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி உளவுதுறை விநாயகரிடம் விசாரணை நடத்தி துன்புறுத்துவது போன்ற_கதை அமைக்கபட்டுள்ளது.

இதற்கு இந்து_அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. விநாயகர் உலகம் முழுதும் வாழும் இந்து கடவுள். அவரை ஹிட்டலரின் நாஜி உளவுதுறை விசாரணை செய்வது போன்று கற்பனைசெய்து பார்ப்பது கற்பனைக்கும் எட்டாதது. அவர் ஒரு கேலி பொருள் அல்ல. இந்துக்களால் வணங்கபடும் கடவுள் என்று தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply