நாஸாவினால் ஏவப்பட்ட பழைய செயற்கைகோள் ஒன்று, பூமியை நோக்கி வேகமாக வருகிறது. இன்று இரவு பூமியில் விழலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

பொதுவாக பழைய செயற்கைகோள்கள் பூமியில் வந்து விழுவது ஒன்றும் புதிதல்ல, இருப்பினும் இந்த முறை செயற்கைகோளின்

பெரியபகுதி பூமியை நோக்கி வேகமாக வருவதால் பாதிப்பு உருவாகலாம் என்று அஞ்ச படுகிறது

இந்த செயற்கைகோள் பூமியின் எந்தபகுதியில் விழும் என நாஸாவினால் துல்லியமாக கணிக்க இயலவில்லை எனவே மக்களிடம் அச்ச உணர்வை அதிகரித்துள்ளது. செயற்கைகோளின் அந்த பெரியபகுதி, ஒரு பெரிய பஸ் அளவு இருக்கும் , அது ஒருமணி நேரத்துக்கு 27,000 கிமீ. வேகம் என்ற அளவில் பூமியைநோக்கி வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இருப்பினும், அது பொது மக்கள் அதிகம் இல்லாத பகுதிகளிலோ அல்லது கடலிலோ விழலாம். இந்த செயற்கைகோள் 20வருடங்களுக்கு முன்பு செலுத்தபட்டது. அதன் மதிப்பு 750மில்லியன் டாலர்களாம்.

{qtube vid:=1U8tvV4J3Dg} {qtube vid:=ZImfDDcSvEw}

Leave a Reply