மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை,” என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் அங்கு நிருபர்களிடம் பேசியதாவது:

உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என,

எதிர்க்கட்சிகள் கேட்பது வழக்கமான ஒன்றுதான். அவர் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது அமைச்சரவை சகாக்கள் எல்லாரையும் நான் பாதுகாப்பேன். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்ற கேள்விக்கே இடமில்லை. எதிர்க்கட்சிகளின் வேலையே அரசை எதிர்ப்பதும், அரசை கவிழ்க்க முற்படுவதும்தான். அதைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கின்றனர் என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

எனது அமைச்சரவை சகாக்கள் அனைவரையும் நான் பாதுகாப்பேன்”. (குற்றம் செய்த என்ற வார்த்தையை சேர்த்து கொள்ள வேண்டியதுதான்) தீவிரவாதிகளையே பாதுகாக்கும்போது இந்த ஊழல் அமைச்சர்களை பாதுகாக்க_மாட்டேனா என்ன என்பது போல் பேசுகிறார்………ஏற்கனவே தான் சேர்த்துவைத்த நேர்மையை பதவிக்காக சிலரின் பேச்சை கேட்டு கொன்று விட்ட பிரதமர் இந்த பேச்சின் மூலமாக தனது மனசாட்சியை கொன்று விட்டார்

Tags:

Leave a Reply