ஜம்முகாஷ்மீர் சட்டசபையில் தூக்கு தண்டனை கைதி அப்சல்குருவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றபடும் என்கிற ஒமர் அப்துல்லாவின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக மாநிலத்தலைவர் சம்ஷேர்சிங் மன்ஹாஸ்,

அப்சல் குருவை தூக்கி லிட்டால், அது காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெரும் பிரச்னையை கொண்டு வரும் என ஒமர்அப்துல்லா கூறியுள்ளார். .வரும் செப்டம்பர் 28ம் தேதி காஷ்மீர் சட்டமன்றதில் அப்சல்குருவுக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்ற காஷ்மீர் மாநில_அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில், ஜம்முபகுதி மாவட்டங்களிலும், லடாக் பகுதிகளிலும் இதற்கு எதிர்ப்புதெரிவித்து கடும் போராட்டங்கள் நடத்தபடும். காஷ்மீரில் அமைதி பாதிக்கபடும் என்ற ஒமரின்_கருத்து மிக தவறானது. பதவி பிரமாணம் எடுத்து கொண்டதை மீறியசெயல் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply