திருப்பதி ஏழு மலையான் கோவிலில் பிரம்மோற்சவ கருட சேவை யின் போது சுவாமியின் மீது பக்தர்கள் நாணயங்களை வீசவேண்டாம் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது .

இது தொடர்பாக அறங்காவலர் குழுதலைவர் பாபிராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

”பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், தங்கும்விடுதி, மருத்துவம், கழிப்பிடம் போன்ற அனைத்து வசதிகளும் செய்யபட்டுள்ளது.

கருட சேவையின்போது சுவாமி வீதிஉலா வரும்போது, பக்தர்கள் நாணயங்களை வீசுவதால், சுவாமிசிலை சேதமாகிறது. அர்ச்சகர்களுக்கு காயம் உண்டாகிறது. எனவே நாணயங்களை சுவாமி மீது வீசக்கூடாது. என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply