ஊழல் அமைச்சர்களை பிரதமர் காப்பாற்றுகிறார்’ என்று , சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளது

இது குறித்து சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : “2ஜி’ மோசடியில், ராஜாவைப் போன்று உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் புரிந்தவர் . ஊழல் அமைசர்களை மன்மோகன்சிங் பாதுகாக்கிறார். மத்திய அரசை கவிப்பதற்கு எதிர்கட்சிகள் எதுவும்

செய்ய வில்லை. அரசிற்குள் இருக்கும் முரண்பாடுகளால் தானாக அது கவிழ்ந்துவிடும்.

அரசை கவிழ்க்கும் அளவிற்கு எங்களிடம் எம்பி.,க்கள் பலம் இல்லை. “2ஜி ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து விவரங்களும் பிரதமருக்கு_தெரியும் என்று , அரசின் பைல்கள் மூலமாக தெரியவந்து உள்ளது. பிரதமருக்கு தெரியாமல் எதுவும் நடக்க வில்லை. “2ஜி’ மோசடிபுகார்கள் தொடர்ந்து கொண்டிருப்பதால், அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும்.

பொறுப்பான எதிர்கட்சி என்ற முறையில் நாங்கள் கேள்விகேட்கிறோம். அப்படிகேட்கும் எங்களை, அரசில் இருப்பவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். “2ஜி’ விவகாரத்தில், பிரணாப்முகர்ஜி மற்றும் சிதம்பரம் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார். .

{qtube vid;=BNHECaAGM-o}

Leave a Reply