ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக இந்தியா திருப்ப பார்க்கிறது . எனவே, அதை சமாளிக்கதான் பாகிஸ்தான் ஹக்கானி தீவிரவாத_அமைப்புக்கு ஆதரவு தந்து வருகிறது என முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஹக்கானி

தீவிரவாத அமைப்பு தொடர்பாக கடும்மோதல் உருவாகியுள்ளது .

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ..,க்கும், ஹக்கானி அமைப்பிற்கும் தொடர்புள்ளது என அமெரிக்கா குற்றம்சுமத்தியது . இதனால் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஹினாரப்பானி கர் கோபம்மடைந்தர் . அமெரிக்கா எங்களை குற்றம்கூறுகிறது. ஆனால் அமெரி்ககாவின் சிஐஏவு..,க்கும் உலகில் இருக்கும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு உண்டு . ஏன் ஹக்கானி அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வந்தாலும் அதை துவக்கி ஊக்குவித்து வருவது சிஐஏதான். சிஐஏவின் செல்லபிள்ளை ஹக்கானி என்று அமெரிக்காவின் மீது பதிலுக்கு குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் பாகிஸ்தானுகும், ஹக்கானி அமைப்புக்கும் தொடர்புண்டு என அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது .

Tags:

Leave a Reply