2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கு எதிராக பெரியளவில் ஆதாரம் இருப்பதாக தெரிவித்த பாஜக, சிதம்பரத்தையும் திகார்சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக தேசிய செய்திதொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது பெரிய அளவில் ஆதாரங்கள் இருந்த

போதிலும் சிதம்பரத்தின் குற்றங்களை மறைக்க அரசு முயற்சித்துவருகிறது. இதுவே இரு வேறு அளவு கோல்கள் பின்பற்ற படுவதை குறிப்பிடுகிறது என்று பிரசாத் செய்தியாளர்களிடம் கூறினார் .

ராசாவுக்கு எதிரான ஆதாரங்கள் இருந்ததால் அவர் சிறையில் இருக்கிறார். சிதம்பரத்துக்கு எதிராகவும் ஆதாரம் இருக்கிறது . அப்படியிருக்க ராசா_மட்டும் உள்ளே இருக்கிறார். சிதம்பரம் வெளியே இருக்கிறார். சிதம்பரமும் திகார்சிறைக்கு அனுப்பபட வேண்டும் என்று ரவிஷங்கர்பிரசாத் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply