ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அடாவடிதனம் மிகுந்த ஆட்சியை நடத்துகிறது என்று பாரதிய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது.

பாரதிய ஜனதாவின் இரண்டு நாள் தேசிய செயற் குழு கூட்டத்தில் இந்தக்கருத்து பலமாக எதிரொலித்தது. மத்திய அரசின் மோசமான செயல்பாடுகளினால் மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அதிருப்தியின் காரணமாக

நாடாளுமன்றத்துக்கு இடைதேர்தல் வர வாய்ப்பு இருப்பதாகவும், தேர்தலை எதிர்கொள்வதற்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என கூறபட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி மற்றும் ப.சிதம்பரத்துக்கு இடையே உருவாகியுள்ள தற்காலிகசமரச விவகாரம் ஒரு கேலிகூத்து, இந்த விவகாரத்திலும் மௌனம்சாதித்த பிரதமர் மிகவும் பலவீனமானவர், சூழ்நிலையை கையாள தெரியாதவர் என பாரதிய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது.

Leave a Reply