ஐக்கிய முற்போக்கு கூட்டணி_அரசு தற்கொலைப்பாதையில் செல்கிறது என பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார் .

பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்தகருத்தை தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்ததி லிருந்து இப்படி ஒரு

மோசமான_சூழ்நிலை நிலவிய தில்லை. அரசின் அனைத்துமட்டங்களிலும் ஊழல் காணப்படுகிறது . அரசை வழி நடத்துவ தற்கான தகுதியை மத்திய அரசு இழந்து விட்டது என குறிப்பிட் டார் ,

மத்திய_அரசு முடங்கி விட்டதால் அதன் மீது மக்கள் வெறுபடைந்துள்ளதாக தெரிவித்த அத்வானி, நல்ல அரசு மற்றும் அரசியல்தூய்மை ஆகியவற்றுகாக அக்டோபர் 11-ம் தேதி தாம் ரத யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுகொண்டார். இந்த ரதயாத்திரை மூலம் மக்களிடையே ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அத்வானி கூறினார் .

Leave a Reply