பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் காபூல்நகரில் பேரணி நடந்தது. இதில் ஆயிர கணக்கான ஆப்கானிஸ் தானியர்கள் கலந்துகொண்டு பாகிஸ்தானுக்கு எதிராககுரல் எழுப்பினார்கள்.

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்க்கு பாடுபட்ட முன்னாள் அதிபர் ரப்பானி கொலை

செய்யப்பட்டதற்கு பாகிஸ்தானின் உளவுதுறையும், தலீபான்களும் சேர்ந்துசெய்த சதி தான் காரணம் என ஆப்கானிஸ்தானிய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் தான் இந்தபேரணி நடந்தது. எங்கள் நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதை நிறுத்திகொள்ள வேண்டும் என பேரணியில் கலந்துகொண்ட பலரும் தெரிவித்தனர்.

Tags:

Leave a Reply