பா ஜ க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அதில் அவர் தெரிவித்ததாவது :-

சென்னை மேயர் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் விடுதலைசிறுத்தை மற்றும் பாரதீய ஜனதா வேட்புமனுக்கள் ஒரே

காரணத்துக்காக தள்ளுபடி செய்யபட்டதாக தெரிவிக்கபட்டது.

மறு பரிசீலனையின்போது விடுதலைசிறுத்தை வேட்பாளரின் மனு ஏற்றுக்கொள்ளபட்டது. விடுதலை சிறுத்தைக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒருநீதியா? இது மிகபெரிய ஜனநாயக படுகொலை. இந்த பிரச்சினைக்கு தேர்தல்நடத்தும் அலுவலரே பொறுப்பேற்க்க வேண்டும். இந்த பிரச்சினையை சட்டபூர்வமாக நாங்கள் சந்திபோம் .

உள்ளாட்சிதேர்தலில் தே.மு.தி.க. தேர்தலை தனித்து சந்திக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முந்தையகூட்டணியால் கைவிடபட்ட கம்யூனிஸ்டு கட்சியுடன் தேமுதிக. கூட்டணி வைத்துள்ளது. தேமுதிக. தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும். இந்ததேர்தலில் அனைத்து கட்சியினரும் தனிதனியாக போட்டியிட்டிருந்தால் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவுசெல்வாக்கு உள்ளது என்பது தெரிந்திருக்கும். ஆனால் இந்ததேர்தல் மூலமாக ஒருகட்சியும் உண்மையான நிலையை தெரிந்துகொள்ள முடியாது என்று கூறினார்.

Tags:

Leave a Reply