குஜராத்தின் வளர்ச்சியை பார்த்து மத்திய அரசு பொறாமைபடுகிறது என அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார் .

போர்பந்தரில் நடந்த காந்திஜெயந்தி விழாவில் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

குஜராத் மாநில ஆளுநர் கமலாபெனிவால் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு

50சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் கையெழு்திட மறுக்கிறார். இதேபோன்று ஆயிர கணக்கான நடுத்தரமக்களுக்கு பயன்படும் மசோதாவையும் திருப்பி அனுப்பி விட்டார். சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டினால் பெரும் தொகையை அபராதமாகவிதிக்க முடிவுசெய்திருந்தோம். ஆனால் ஆளுநர் அந்த மசோதாவிலும் கையெழுதிடவில்லை.

இந்தமசோதா மட்டும் நிறைவேறியிருந்தால் நடுத்தரமக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.

மத்திய அரசுக்கு குஜராத்தின் வளர்ச்சியை பார்த்து பொறாமை. குஜராத்தின் எதிரிகள்யார் என்பதை மக்கள் கண்டு கொள்ள வேண்டும். மத்திய அரசு குஜராத்தோடு போட்டிபோட்டு முன்னேறுவதை விட்டுவிட்டு நம் மீது ஏதாவது குற்றம் கூறுகிறது,” என்றார்.

Tags:

Leave a Reply