2ஜி ஊழலில் மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராசாவுக்கும் சமமான பங்குண்டு என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார் .

மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது -:

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ப.சிதம்பரமும் ஆ. ராசாவும் ஒன்றாக எல்லாவற்றையும் முடிவுசெய்துள்ளனர். ஆகவே , ஆ.ராசா குற்றம் செய்தவர் என்றால், ப.சிதம்பரம்? ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்கள் மிகமிக வலுவாக இருக்கிறது என்றார்.

Tags:

Leave a Reply