வலுவான லோக் பால் கொண்டு வரவில்லை எனில் அடுத்து சட்டசபைத்தேர்தல் நடக்கவிருக்கும் உபி உள்ளிட்ட 5மாநில தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்துப்பிரச்சாரம் செய்யப்போவதாக அன்னா ஹஸாரே மிரட்டியுள்ளார் .

இதுகுறித்து அன்னா ஹசாரே நிருபர்களிடம் பேசுகையில், “லோக்பால் மசோதாவை நிறை வேற்றுவதில் மத்திய அரசு காலம்கடத்துகிறது. பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடருக்கு முன்பாக மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

இல்லையென்றால் மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன் .அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்நடைபெறும் உத்தர பிரதேசம், பஞ்சாப்,உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் சுற்றுபயணம் செய்து காங்கிரசுக்கு எதிராக பிரசாரம்செய்வேன் என்று மிரட்டியுள்ளார் .

{qtube vid:=XWxmJJsIDYM}

Tags:

Leave a Reply