சீனாவுடனான இந்தியவின் வெளியுறவு கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும் என பாரதிய ஜனதா கோரிக்கைவிடுத்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4000 _சீன துருப்புகள் இருப்பதாக ராணுவத் தலைமை_தளபதி விகே. சிங் புதன் கிழமை தெரிவித்திருந்ததை தொடர்ந்து மத்திய_அரசுக்கு, பாரதிய ஜனதா . இந்தகோரிக்கையை விடுத்துள்ளது.

 

பாரதிய ஜனதா. செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் இதுகுறித்து தெரிவித்ததாவது

ஹக்கானி தீவிரவாத குழுவுடனான பாகிஸ்தானின் நெருக்கம் குறித்து அமெரிக்கா கருத்துதெரிவித்தது. இதைதொடர்ந்து பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் உருவாகியுள்ளது .இதையதொடர்ந்து பாகிஸ்தான், சீனாவுடன் தனதுநெருக்கத்தை அதிகரித்துள்ளது. ஆனால் இந்திய அரசு இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது .

இந்த விஷயத்தில் தூங்கிகொண்டிருக்கும் மத்திய அரசு, உடனடியாக விழித்துகொண்டு சீனாவுடனான வெளியுறவுகொள்கையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், உள்நாட்டு , வெளிநாட்டு பாதுகாப்பு_விஷயத்தில் மத்திய அரசு தேவையான நடவடிகைகளை மேற் கொள்ளாமல் இருக்கிறது என்றார் ஷாநவாஸ் ஹுசைன்.

Tags:

Leave a Reply