பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினால் சுட்டுகொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது 3_மனைவிகளையும் , குழந்தைகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் தனது பாதுகாப்பில் வைத்திருந்தது. அவர்கள் அந்தநாட்டில் இருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகளின் விசாரணை முடிந்து விட்டது. இனி விசாரணைக்கு அவர்கள்தேவையில்லை இதைதொடர்ந்து பின்லேடனின் மனைவிகளை அவர்களது தாய் நாடுகளுக்கு திருப்பியனுப்ப பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

பின்லேடனின் 3_மனைவிகளில் 2 பேர் சவுதி அரேபியாவையும், ஒருவர் ஏமனையும் சேர்ந்தவர்கள் . எனவே அந்த இரண்டு நாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தபட்டது.

அந்தநாடுகளும் அவர்களை ஏற்றுகொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டன. நடந்த சம்பவம் தொடர்பாக விதவைமனைவிகள் ஊடகங்களிடம் பேசகூடாது என்கிற நிபந்தனையின்பேரில் அவர்கள் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப படுகிறார்கள்.

Leave a Reply