ஊழல் புரையோடிப் போயுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் நீடிக்க அதன் கூட்டணிக் கட்சிகள் விரும்பாது என்று பாஜக-வின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.

பிகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் தெரிவித்ததாவது: ஊழல்மிக்க காங்கிரஸ் அரசில், அதன்

கூட்டணிக் கட்சிகளான திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்டவை தொடர்ந்து நீடிக்காது. இதனால் சீட்டுக் கட்டு சரிவதைப்போல காங்கிரஸ் அரசு விரைவில் கவிழ்ந்துவிடும்.

காங்கிரஸின் ஊழலை தங்கள் முதுகில் சுமக்க வேண்டுமா என்ற கேள்வியும், அது குறித்து அமைதியின்மையும் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது.

மூழ்கும் நிலையில் உள்ள காங்கிரஸ் அரசை விட்டு, கூட்டணிக் கட்சியினர் விரைவில் வெளியேறுவர்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டில் மற்ற அமைச்சர்கள் இல்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடவடிக்கைளை தொடருமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு அறிவுறுத்தப்பட்ட கடிதம் வெளியாகி உள்ளது. 2ஜி முறைகேட்டுக்கு தார்மிகப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் முழு சம்மதத்துடனேயே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியுள்ள 2ஜி அலைக்கற்றை முறைகேட்டை ஆ.ராசா ஒருவரால் மட்டும் செய்திருக்க முடியாது.

நில ஒப்பந்தம்:÷மேகாலயத்தில் உள்ள நிலப்பகுதிகள் சிலவற்றை வங்கதேசத்துக்குத் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இச்செயல் காங்கிரஸ் கட்சிக்கு நாட்டுப்பற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

வங்கதேசத்துடனான தண்ணீர் பகிர்வு ஒப்பந்தத்தை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்த்துள்ளார். ஆனால், அதை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை.

விலை உயர்வு, ஊழல், பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அண்ணா ஹசாரேவும், ஹரியாணா மாநிலம், ஹிஸார் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் காங்கிரûஸ எதிர்த்துப் பிரசாரம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தற்போது ஆட்சி மாற்றத்துக்கான குரல் ஒலிக்கத் துவங்கியுள்ளது. பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஊழலற்ற நிர்வாகம், தூய்மையான அரசியல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ரத யாத்திரை மேற்கொள்ளவுள்ளார் என்றார் ராஜீவ் பிரதாப் ரூடி.

பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிலைப் படுத்துவதற்காகதான் எல்.கே. அத்வானி ரத யாத்திரை மேற்கொள்கிறார் என்ற கருத்தை ரூடி மறுத்தார்.

இந்த ரத யாத்திரை தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply