முன்னாள் மத்திய ஜவுளிதுறை அமைச்சர் தயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுவருகின்றனர் .

தயாநிதிமாறனின் டெல்லி, சென்னை போட்கிளப், ஹைத்ராபாத் வீடுகளிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டுவருகிறது . தயாநிதி மாறன் வீட்டில் இன்று காலை 7மணி முதல் இந்தசோதனை

நடைபெற்று வருகிறது , 7சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது .

சன் டிவி,,யின் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனின் வீட்டிலும், சன்டிவி அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனைமேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply