அத்வானியின் ஜன் சேத்னா_யாத்திரை இன்று 2வது நாளாக நடை பெற்று வருகிறது. இந்த ரதயாத்திரையின் போது பணவீக்கம், ஊழல், வறுமைக்கோடு, கறுப்புப் பணம் போன்ற பல்வேறு விஷயங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அத்வானி கண்டனம்தெரிவித்தார்.

லோக் ஆயுக்த அறிக்கை கிடைத்ததும் கர்நாடக முதல்வரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்தோம். இதுகட்சிக்கு இருக்கும் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பை காட்டுகிறது. அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயக_கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அத்வானி தெரிவித்தார்.

இன்றைய அத்வானி ரதயாத்திரை பயண திட்டத்தின்படி அவர் வாரணாசிக்கு செல்கிறார். வாரணாசியில் 3 பொது கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.

Tags:

Leave a Reply