அண்ணா ஹசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தருகிறது ,,, அண்ணா ஹசாரேவுக்க் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு ,,, அண்ணா ஹசாரே- " ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் முகமூடி", இப்படியெல்லாம் கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் குறிப்பாக காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய்சிங் புலம்பி வருகிறாரே , அது சரி அண்ணா ஹசாரேவின் உண்ணா விரத போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தந்தால்தான் என்ன தப்பு ?

 

அண்ணா ஹசாரே என்ன எங்கேயும் குண்டு வைக்கணும் என்று உண்ணாவிரதம் இருந்தாரா ? இல்ல ஆர்.எஸ்.எஸ் குண்டுவைக்கிற இயக்கமா ? ஊழலை ஒழிக்கணும்னு சொன்னா தப்பு ! இதுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தந்தா இதைவிட பெரியதப்பு ! இதுதான் காங்கிரஸ்சின் நியதி ,

ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு ஒழுக்கமான கட்டுக்கோப்பான சமுதாய இயக்கம் இதன் முக்கியகொள்கை கலாச்சார தேசியவாதமாகும் முழு மனிதபற்றை கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக்கொண்ட பாரம்பரிய இந்தியாவுக்கு புத்துயிர் தருவது . தேசத்துக்கு சேவைசெய்வதை அன்னை பாரத மாதாவுக்கு சேவை செய்வதாக கொண்டு இந்தியாவை தன் தாய்நாடாக நினைத்து அதை பாதுகாப்பது,

இப்படி அன்னை பாரத மாதாவை தன உயிராக நேசிக்கும் ஒரு இயக்கம் இந்த தேசத்தை பால்படுத்தும ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அண்ணா ஹசாரேவின் உயர்ந்த் போராட்டத்துக்கு ஆதரவு தருவதில் என்ன தவறு? ,

இதியா முழுவதும் ஊழல் பெருகவேண்டும் , இதன் மூலம் இதிய பொருளாதாரம் விழவேண்டும் என்று கருதும் சீனா, பாகிஷ்தான் போன்ற நாடுகள் வேண்டுமானால் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தையும் , ஆர்.எஸ்.எஸ் சின் ஆதரவையும் கண்டு பயம் கொள்ளலாம், நீங்கள் பயம் கொள்வதன் அர்த்தம் என்ன , நீங்கள் என்ன அந்நிய கைக்கூலிய? ?

ஊழலை ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்தில் என்ன தவறு , அது உங்களுக்கு ஏன் இடிக்கிறது. அண்ணா ஹசாரேவின் உண்ணா விரத போராட்ட கூட்டத்த்தில் முஸ்லிம்கள் நிறையபேர் உக்காந்து இருந்தனர். கிருத்துவர்களும் இருந்தனர். அதனால என்ன யாரேனும் குத்தம் சொன்னாங்கள . இந்து இயக்கம் ஆதரவு தந்தா மட்டும் அது காவி தீவிரவாதிகள் ஆதரவு. முஸ்லிம் இயக்கம் ஆதரவுகொடுத்தா அதை பற்றி இந்ததொடை நடுங்கி காங்கிரஸ் இயக்கம் பேசுவதில்லை.

பெரும்பான்மை இந்து இயக்கங்களை தீவிரவாதி போன்று சித்தரிக்க காங்கிரஸ் முயலுகிறது. குறிப்பாக திக்விஜய் சிங்குக்கு இதில் அலாதி ஆர்வம் , இதனால் தான் இவர்களை சோனியாவுக்கு ரொம்ப பிடிக்கும் அவர்கள் தப்புசெய்தாலும்.

ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி, ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் இதில் ஹசாரே மேல் என்ன தவறுகண்டீர்? 1991 நவம்பர் 11ல் ராஜீவ்காந்தி மறைந்து சிறிதுகாலத்திற்கு பிறகு ஸ்விஸ் இல்லஸ்ட் டிரியேட் பத்திரிகையில் வளர்ந்துவரும் நாடுகளின் 16 தலைவர்களின் படங்களை_பிரசுரித்து, அவர்கள் எல்லாம் அந்தநாடுகளில் லஞ்சம் வாங்கி, அந்த லஞ்சப்பணத்தை இங்கே கொண்டுவந்து பதுக்கியிருக்கிறார்கள் என எழுதியிருந்தது.

அந்த தலைவர்களின் வரிசையில் ராஜீவ் காந்தி படத்தை பிரசுரித்திருந்த தோடு, 2.2 பில்லியன் டாலர் ராஜீவ் காந்தி கணக்கில் மறைத்து வைக்கபட்டுள்ளது என செய்தியை வெளியிட்டிருந்தது.

ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபி.யின் தாஸ்தாவேஜூகளை வெளியே கொண்டுவந்த டாக்டர் ஆல்பர்ட்ஸ் ஒரு இன்வெஸ்டி கேட்டிவ் ஜர்னலிஸ்ட், "ராஜீவ் காந்தி எப்படி கே ஜி பி.யிடமிருந்து ரகசியமாக பணம்பெற்றார்..? ரஷ்யாவுடன் வியாபார சம்பந்ததின் மூலம் எப்படி ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு ஏராளமான பணம்கிடைத்தது என்பதை வெளியிட்டிருந்தார். அந்தப்பணம் அங்கு வங்கியில் உள்ளது என்று சுப்பிரமணியம்சுவாமி 2002ல் வெப்சைட்டில் வெளியிட்டிருந்தார் அதற்க்கு உமது பதில் என்ன? காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்தும் காஷ்மீர் அரசு அப்சல் குருவை விடுதலை செய்ய தீர்மானம் இயற்ற இருந்ததே அதற்க்கு உமது பதில் என்ன?

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply