அரசுநிலத்தை முறைகேடாக விற்ற வழக்கில் முன்ஜாமின் நிராகரிக்கபட்டதை தொடர்ந்து எடியூரப்பாவை கைதுசெய்ய லோக் ஆயுக்தா நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. இதை தொடர்ந்து ‌எடியூரப்பா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் சரண்டரானார். சரணடைந்த எடியூரப்பாவை வரும்

22ம்தேதி வரை நீதி்மன்ற காவலில்வைக்க லோக் ஆயுக்தா நீதிபதி உத்தரவிட்டுள்ளார் .

இந்நிலையில் இது குறித்து பாரதிய ஜனதா செய்திதொடர்பாளர் ஜே.பி. நட்டா தெரிவிக்கையில் , இவ்விவகாரத்தை பாரதிய ஜனதா சட்டப்படி சந்திக்கும் , அடியோடு ஊழலை வேரறுக்க பாரதிய ஜனதா., உறுதி பூண்டுள்ளது . இவ்விஷயத்தில் கருத்துதெரிவிக்க காங்கிரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply