தகவல் அறியும் உரிமை சட்ட கூறுகளை மறுஆய்வுக்கு உட்படுத்தும் விதத்தில் பிரதமர் பேசியதற்க்கு பா ஜ க மூத்த தலைவர் எல்கே. அத்வானி கண்டனம்_தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: தகவல் அறியும் உரிமை

சட்டத்தை எந்தவித மறு_ஆய்வுக்கும் உட்படுத்துவதை பாஜக எதிர்க்கிறது. ஏனென்றால் அரசாங்கம் வெளிப்படையான தன்மையுடன் இருப்பதற்கு இந்தசட்டம் ஆற்றல் மிக்ககருவியாக உள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

இந்த அரசை போன்ற ஊழல் மிக்க , செயல்படாத ஒரு அரசை எப்போதும் நான் கண்டது இல்லை. காஷ்மீர் விஷயத்தில் பிரசாந்த் பூஷண்ணின் கருத்திலிருந்து அண்ணா ஹசாரே முரண்பட்டிருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறினார்.

{qtube vid:=_N8p5uLcgqI}

Leave a Reply