லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி, லிபிய புரட்சிப் படையால் கொல்லப்பட்டுவிட்டார் என்று என்.டி.சி ராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். அவரைச் சுற்றி வளைத்தபோது நடந்த சண்டையில் பெரிதும் காயமடைந்ததாகவும், அதனால் அவர் இறந்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அவர் அங்கே சண்டை நடந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், புரட்சிப் படை ராணுவத்தின்

கடும் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அவர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடாபியின் சொந்த ஊரான சிர்தேவில் அவர் இருந்துள்ளார். புரட்சிப் படையினர் அவரை சுற்றிவளைத்துச் சுட்டப்போது, ‘என்னைச் சுடாதீர்கள்’ என்று அவர் கெஞ்சியுள்ளார். இருப்பினும் புரட்சிப் படையினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடாஃபியின் பிறந்த இடமான சிர்ட்டியை பிடித்துவிட்டதாக லிபிய படைகள் நேற்று இரவு அறிவித்தது. 1969-ம் ஆண்டில் லிபியாவில் ராணுவப் புரட்சி மூலம் கலோனல் கடாஃபி ஆட்சிக்கு வந்தார். அவர் லிபிய தலைமைப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று இந்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் புரட்சி ஏற்பட்டது.

எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து பிப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது முதல் நடைபெற்று வரும் போரில் லிபிய புரட்சியாளர்கள் லிபியாவின் பல்வேறு நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கடாபி பிறந்த நகரமான சிர்ட்டி மட்டும் பிடிபடாமல் இருந்தது. நேற்று இரவு அந்த நகரத்தையும் லிபிய படையினர் பிடித்தனர்.

{qtube vid:=sd-cHdOOA2E}

Tags:

Leave a Reply