காங்கிரஸ்சால் தான் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை கூட பெரமுடியத நிலையில் உள்ளது, மத்தியில் ஆளும் இந்த தேசிய கட்சியால் ஒரு நகராட்சி தலைவர் பதவியைக்கூட பெற முடியவில்லை, தங்களுக்கு தனி செல்வாக்கு இருக்கு என்று பில்டப் கொடுத்த தலைவகள் எல்லாம் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை,

இந்த் தேர்தல் மட்டுமல்ல இனி வருகிற எல்லாத் தேர்தலிலும் அவங்க தனித்தே போட்டியிடுவாங்கலாம் . வேண்டுமானால் மற்றவர்கள் அவங்கள்ட்ட கூட்டணி பேச போகனுமா இந்த வீரவசனத்துக்கு சொந்தக்காறு நம்ம தங்கபாலு எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி பேசுவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எங்களுக்கு சுமை குறைந்துவிட்டது திமுகவிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டது
இந்த வீரவசனத்துக்கு சொந்தக்காறு நம்ம ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசின்_தோல்விக்கு திமுகவின் ஊழல்தான் காரணம் என்று வீரவசனம் பேசியவர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா.

இப்படி வீரவசனம் பேசிய தலைவர்கள் தங்கள் சொந்த ஊரில் எத்தனை கவுன்சிலர் பதவிகளை பிடித்தார்கள் என்பது கேள்விக்குறியே, இதுதான் காங்கிரஸின் உண்மையான நிலை, இத்தனை காலமும் அது ஓசி சவாரி செய்து செய்தே பழக்கபட்டுவிட்டதால் உண்மையான பலத்தை இப்போதுதான் அந்தகட்சி மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழகமும் பார்க்கும் நிலையை உருவாக்கியுள்ளனர், இந்த புகழ் அனைத்தும் இந்த தலைவர்களையே சேரும் ,

சென்னையில் ஒரு வார்டு கவுன்சிலரை கூடப்பெற முடியவில்லை இந்தகட்சியால். ஒரு நகராட்சித் தலைவர் பதவியை கூட பெற முடியவில்லை . கடந்த சட்டசபை தேர்தலில் திமுக புண்ணியத்தில் குமரி_மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு இருப்பதாக தெரிந்தது காங்கிரஸுக்கு இந்தமுறை முட்டையைத்தான் மக்கள் பரிசாக தந்துள்ளனர்.

மொத்தத்தில் இவ்வளவு காலமா இத்தனை சதவீதம் வாக்கு இருக்கிறது என்று பில்டப் தந்து ஓசி சவாரி செய்து உழைக்காமல் பிழைத்து வந்த காங்கிரஸின் சுயரூபம் வெளுத்து விட்டது.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply