தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற விழாவில் மேயராக அதிமுகவின் சைதை துரைசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மாமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும்

பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார்.

மதுரை மேயராக அதிமுகவின் ராஜன் செல்லப்பா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் நடராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.

திருச்சி மேயராக அதிமுகவின் ஜெயா பதவியேற்றார். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

திருநெல்வேலி மேயராக அதிமுகவின் விஜிலா பதவியேற்றார். அவருக்கு கமிஷனர் அஜய் யாதவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தூத்துக்குடி மேயராக அதிமுகவின் சசிகலா புஷ்பா பதவியேற்றார். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் ஆலிவர் பொன்ராஜ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

கோவை மாநகராட்சி மேயராக செ.ம.வேலுச்சாமி பதவியேற்றார். அவருக்கு கமிஷனர் முத்துச்சாமி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

திருப்பூர் மாநகராட்சி மேயராக விசாலாட்சி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தேர்தல் அலுவலர் ஜெயலட்சுமி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சண்முகவேலு கலந்துகொண்டார்.

ஈரோடு மேயராக மல்லிகா பரமசிவம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் பாலச்சந்திரன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சேலம் மேயராக சவுண்டப்பன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் லட்சுமிப்பிரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

வேலூர் மேயராக கார்த்தியாயினி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் அஜ்மல் கான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் பதவியேற்றதைத் தொடர்ந்து 29-ம் தேதி துணை மேயர், துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

Tags:

Leave a Reply