மதுரையில் இன்று மாலை மக்கள் விழிப்புணர்வு யாத்திரை பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள எல்.கே.அத்வானி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மாலை 6 மணிக்கு மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து எல்.கே.அத்வானி காரில்

வருகிறார். மதுரை மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். பின்னர் அழகர்கோவில் ரோட்டில் உள்ள சங்கம் ஓட்டலில் தங்குகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை மதுரையில் இருந்து மக்கள் விழிப்புணர்வு யாத்திரை எல்.கே.அத்வானி தலைமையில் புறப்படுகிறது. பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி வழியாக திருவனந்தபுரம் செல்கிறார்.

எல்.கே.அத்வானி மதுரை வருகையையொட்டி தேசிய பாதுகாப்பு வீரர்கள் உள்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். விமான நிலையம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் சங்கம் ஓட்டல் மற்றும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:

Leave a Reply