மதகலவர தடுப்பு சட்டத்தின் மூலமாக இந்துக்களுக்கு எதிராக மத துவேஷத்தை பரப்ப முயல்வதாக சோனியா காந்தியின் மீது ஜனதா_கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி புகார் கூறியுள்ளார் .

இந்த சட்ட மசோதாவை இறுதிசெய்துள்ள தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவ வர் சோனியா மற்றும் அதன் உறுப்பினர்களின்

மீது இந்திய தண்டனை சட்டத்தின் 153A & B, 295A, 505 ஆகிய பிரிவுகளின்_கீழ் வழக்கு தாக்கல்செய்ய வேண்டும் என சாமி கோரியுள்ளார்.

இந்த மசோதாவில் இருக்கும் அம்சங்கள் இந்துக்களுக்கு எதிராக உள்ளதாக சாமி குற்றம் சுமத்தியுள்ளார். இந்துக்கள்தான் மதகலவரத்தைத் தூண்டி விடுவோர் என்பது போன்றும் , மற்ற சிறுபான் மையினர் பாதிப்புக்கு மட்டுமே உள்ளாவது போலவும் இந்தமசோதாவின் தொனி அமைந்துள்ளது.

இந்த மசோதாவின் மூலம் வெவ்வேறு மதத்தினரிடையே அவ நம்பிக்கை மட்டும் தான் உருவாகும். இதுபோன்ற ஒரு சட்டத்தை வைத்திருந்தால், எல்லைதாண்டி வந்து லஷ்கர் ஏ தொய்பாவும், ஹர்கத்_உல்_ஜிகாதி இ்ஸ்லாமியும் தீவிரவாதத்தை தூண்டிவிட வேண்டியதில்லை, அதற்கு பதிலாக இந்த_தீவிரவாத அமைப்புகள் இந்தியாவுக்குள் ஒரு சிறிய மதக்கலவரத்தை தூண்டி விட்டாலே போதும், அவர்கள் நினைத்ததை_சாதித்து கொள்ளலாம்.

இதுபோன்ற ஒரு மசோதாவை உருவாக்கிய சோனியாகாந்தியும் அவருடன் இணைந்து இதைஉருவாக்கிய தேசிய ஆலோசனைக் கவுன்சிசில் உறுப்பினர்களும் இந்திய தண்டனை_சட்டத்தின் 153A & B, 295A, 505 போன்ற பிரிவுகளின் கீழ் தவறுசெய்தவர்கள் ஆகிறார்கள். எனவே அவர்க ளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சாமி கோரியுள்ளார்.

Tags:

Leave a Reply