மதுரை திருமங்களம் அருகே அத்வானி ரத யாத்திரை செல்லயிருந்த பாதையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யபட்டுள்ளது.

பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மதுரைக்கு வந்த அத்வானி, பிரச்சார பொதுகூட்டத்தில் பேசினார்.

இன்று காலை மதுரையிலிருந்து விருது நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் பிரச்சாரத்தை முடித்துகொண்டு, மதிய உணவிற்ககு நெல்லை_மாவட்டம் தரணி சுகர் ஆலை கெஸ்ட் அவுசுக்கு செல்கிறார்.

இந்நிலையில், ஆலப்பட்டி தரைபாலத்தில் இருந்து 8 அடி_நீள பைப் குண்டு கண்டெடுக்கபட்டுள்ளது.
இந்த பாலத்தின் வழியாகதான் அத்வானி ரதயாத்திரை மேற்கொள்கிறார்.

பைப்வெடிகுண்டு வைத்த சதிகாரன் யார் என்று தீவிரவிசாரனை நடைபெற்று வருகிறது . குண்டு பறிமுதலை தொடர்ந்து அத்வானி செல்லும்பாதையில் பலத்தபாதுகாப்பு போடபட்டுள்ளது.

{qtube vid:=u_nCAIDyRlo}

Tags:

Leave a Reply