பிரதமர் பதவிக்கான_போட்டியில் நான் இல்லை என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். உ.ப மாநில பாரதிய ஜனதா கூட்டம் குஷிநகரில் நடைபெற்றது . இந்தகூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நிதின்கட்காரி, சமீப காலமாக பிரதமர்பதவிக்கான போட்டியில் நான் இருக்கிறேனா என்று கேட்கபடுகிறது.

இதனை நான்மறுக்கிறேன். நான் என் வாழ்க்கையில், பல தலைவர்கள் தங்களுடைய சுயவிருப்பங்களை தவிர்த்து பொதுமக்களுக்காக தங்கள் வாழ்க்கையை_அர்பணித்து கொண்டுள்ளதை பார்த்துள்ளேன். உ.பி., சட்டசபை_தேர்தலில் வெற்றி வேட்பாளர்களுக்கே வாய்ப்பு தரப்படும் . யாருடைய சிபாரிசுகளும் ஏற்கபடாது என்று கூறினார்.

Tags:

Leave a Reply