பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறவில்லை எனில் மத்திய அரசிலிருந்து விலகுவோம் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி எச்சரித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ்ன் உயர்நிலைக்குழு இன்று அவசரமாக கூடிவிவாதித்தது. பெட்ரோல்

விலையை உயர்த்துவது தொடர்பாக தங்கள் கட்சியை கலந்து ஆலோசிக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.

சாதாரண மனிதனைபாதிக்கும் இது போன்ற முடிவுகளை எடுப்பதை_தவிர்க்கவில்லை எனில் திரிணமூல் காங்கிரஸ்கட்சி எம்பிக்கள் ராஜிநாமா செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.

அரசிலிருந்து வெளியேறவேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் விருப்பம்தெரிவித்தனர். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் கேன்ஸ் மாநாட்டிலிருந்து திரும்பிய பிறகு அவரிடம் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கபடும் என மம்தாபானர்ஜி தெரிவித்தார்.

Tags:

Leave a Reply