ஜனநாயகத்தை பொறுத்தவரை, பிரதமரின் வார்த்தைதான் இறுதியானதாக இருக்கவேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் அப்படித்தான் செயல்படுவார் என்று நினைத்தேன். ஆனால், அவர் அப்படிச்செயல்படவில்லை. அவரின் வார்த்தைகளுக்கு இங்கு மதிப்பே இல்லை,” என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் .

ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை மேற்கொண்டுள்ள, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுவிட்சர்லாந்தில் இருக்கும் வங்கிகளில், கறுப்புபணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்பட்டியலை பிரான்சு அரசு, இந்திய அரசிடம் சமீபத்தில் அளித்தது. ஆனால், இந்தபட்டியலை வெளியிடுவதற்கு, மத்திய அரசு மறுத்துவருகிறது.

இதன் மூலம், கறுப்புப்பண விவகாரத்தில்_தீவிரமாக செயல் படுவதை அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது.கறுப்புபணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை_வெளியிடுவதில் என்ன தயக்கம்? இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் வரிவிதிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுதிட்டுள்ளன. இந்தஒப்பந்தம், அடுத்தாண்டு ஏப்ரலில்தான் அமலுக்கு வரும்.

கறுப்புபணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், அவற்றை வேறு ஒருவங்கி கணக்கிற்கு மாற்றி_விடுவதற்கு, அவர்களுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளதா? இந்தவிவகாரத்தில், அரசின்நடவடிக்கை, சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலுள்ளது.

ஊழலுக்கு எதிரான லோக்பால்மசோதா, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றபடும் என நம்புகிறேன். ஹசாரே பரிந்துரைத்த ஜன்லோக்பால் மசோதாவில், சிலகுறைகள் உள்ளன.இதைபற்றி ஹசாரே குழுவிடம் தெரிவித்துவிட்டோம். இருந்தாலும், ஊழலுக்கு_எதிராக அவர்கள் போராட்டம் நடத்துவதால், இந்தகுறைகளை வெளிப்படையாக தெரிவிக்க விரும்பவில்லை. பிரதமர் பதவி_வகிப்போரும், லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான், எங்களின் நிலைப்பாடு என்று தெரிவித்தார் .

Tags:

Leave a Reply