பாரதிய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய_அமைச்சருமான யஷ்வந்த் சின்கா தெரிவித்ததாவது : மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தபட்டுள்ளது. இதனால், பொது மக்களுக்கு ஏற்ப்பட போகும் பாதிப்பை உணராமல், மத்திய_அரசு விலையை உயர்த்தியுள்ளது.

விலை உயர்வுக்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையில், ஐ.மு., கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகள், அரசுக்கு தந்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும்.பொது மக்களும் விலை உயர்வுக்கு_எதிராக போராட்டம் நடத்தவேண்டும். அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை, பொதுமக்கள் செலுத்தகூடாது. நள்ளிரவில் இந்தவிலை உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை நள்ளிரவு படுகொலை என விமர்சிக்கலாம்.இவ்வாறு யஷ்வந்த்சின்கா தெரிவித்தார் .

Leave a Reply