அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள் விண் வெளியிலிருந்து ராட்சத எரிகல் ஒன்று பூமியைநோக்கி வருவதை கண்டுபிடிதுள்ளனர். அந்த எரிகல் 400 மீ அகலமானது. ஒரு பெரியவிமானம் போன்றது. அதற்கு “2005 ஒய்யூ.55” என்று பெயரிடபட்டுள்ளது.

அது 3,25 ,000 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது . மெல்ல பூமியைநோக்கி வரும் அந்த எரிகல் தற்போது சந்திரனை நெருங்கியுள்ளது. வருகிற வியாழகிழமை வானத்தில் உலாவரும் என எதிர்பார்க்கபடுகிறது. அப்போது அதை வெறுங்கண்களால் பார்க்க முடியும்.

மேலும் இந்த எரிகல் பூமியை தாக்காது. அதனால் எந்த_ஆபத்தும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1976ம் ஆண்டு ஒருபெரிய எரிகல் பூமியை நோக்கிவந்தது. அதன் பிறகு தற்போது ஒருராட்சத எரிகல் வந்துகொண்டிருக்கிறது. அடுத்த எரிகல் 2028ம் ஆண்டில் பூமியைநோக்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:

Leave a Reply