தமிழ்நாட்டில் ரதயாத்திரை மேற்கொண்ட பா.ஜ க தலைவர் அத்வானியை கொல்ல மதுரையருகே பைப்வெடிகுண்டு மூலம் முயற்சிநடந்தது.

இதுதொடர்பாக முக்கிய குற்றவாளிகளை கைது செய்யகோரி பா, ஜனதா சார்பில் சைதாபேட்டை பனகல்மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தொடங்கிவைத்து பேசினார்.

அவர், ”அத்வானி ரத யாத்திரையால் மிகபெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்ததேர்தலில் பா ஜ க ஆட்சியைபிடிப்பது உறுதி .

காங்கிரஸ் அரசு தீவிரவாததுக்கு துணைபோகிறது.

தமிழ்நாட்டில் ரத யாத்திரை மேற் கொண்ட அத்வானியை கொல்ல பைப் வெடிகுண்டு மூலம் முயற்சிநடந்தது. அந்த முயற்சி முறியடிக்கபட்டு இரண்டு பேர் கைது செய்யபட்டுள்ளனர். இது பாராட்டுதளுக்குரியது.

அதேநேரத்தில் இந்த சதி திட்டத்தை தூண் விட்டவர்கள் யார்? பின்னணியிலிருந்து இயக்குபவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க_வேண்டும்.

பா ஜ க ஆட்சிக்குவந்தால் தீவிரவாதம் ஒழியும். வெளிநாடுகளில் பதுக்கபட்டுள்ள கறுப்பு பணம் மீட்கபடும். உலகுக்கே வழிகாட்டியாக இந்தியா தலைசிறந்த நாடாக மாறும்” என பேசினார்.

Tags:

Leave a Reply