கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும்போராட்டத்தை வரும் 20ல் நடத்தபோவதாக இந்து தேசிய காங்கிரஸ் நிறுவன தலைவர் கூறியுள்ளார் .

இது குறித்து இந்து தேசிய_காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் மதுசூதன பெருமாள் கூறியதாவது , போராட்டதின் ஒருங்கிணைபாளராக இருக்கும் உதயக்குமார் அமெரிக்காவில்

குடியுரிமைபெற்றவர் என்ற குற்றசாட்டை இன்னமும்_மறுக்கவில்லை.

அவர் இந்திய அணு சக்தியின் பாதுகாப்பு விஷயங்கள்குறித்து 50சந்தேகங்களை கிளப்புகிறார். ஒருஅமெரிக்க பிரஜைக்கு இந்திய பாதுகாப்புகுறித்த சந்தேகங்கள் எதற்கு. போராட்டம்நடத்தும் அமைபுகளுக்கு ஜெர்மனியை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் ஒருநிறுவனம் நிதி யளிக்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் ஒருசிலர் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மத்திய அமைச்சர் நாராயணசாமி வெறுமனே_கூடங்குளத்தை திறப்போம் என்று கூறுகிறார். விரைவில் திறக்க வேண்டும். இல்லை யென்றால் வரும் 20ல் இந்து_தேசிய காங்கிரஸ் கட்சியினர் திரண்டுசென்று அணுமின் நிலையத்தை திறந்து வைக்கும் போராட்டத்தில் ஈடு படுவோம் என்று தெரிவித்தார் .

Tags:

Leave a Reply