இந்தியாவுக்கு யுரேனியத்தை விற்க ஆஸ்திரேலியா பிரதமர் ஜூலியாகிலார்டு விருப்பம் தெரிவித்துள்ளார். என்பிடி., எனப்படும் அணு ஆயுத பரவல் தடைசட்டத்தில் இந்தியா கையெழுதிடாததால், இவ் வொப்பந்தத்தில் கையெழுதிடாத நாடுகளுக்கு யுரேனியம்சப்ளை செய்யமுடியாது என்று பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா தெரிவித்து வருகிறது.

யுரேனியம் அதிகமாக கிடைக்கும் ஆஸ்திரேலியா வின் இந்தமுடிவால் இந்தியாவுக்கு யுரேனியம் கிடைப்பதில் சிக்கல் நீடித்துவந்தது. இந் நிலையில், இது குறித்து கருத்துதெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியாகிலார்டு, இந்தியாவுடனான உறவை பலப்படுத்தும்விதமாக, தனது நீண்டநாள் கொள்கையை லேபர்கட்சி மாற்றிகொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

Leave a Reply