வெள்ளை கொடி வழக்கில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என்று தீர்மானித்து 36 மாதகால சிறை தண்டனை_வழங்கி கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.

இறுதிகட்ட போரின்போது வெள்ளை கொடி ஏந்தி சரணடைந்த தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களின் மீது, துப்பாக்கி சூடு

நடத்து மாறு பாதுகாப்புசெயலாளர் கோத்தபாய ராஜபட்ச உத்தரவு பிறப்பிதிருந்ததாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சரத் பொன்சேகா நேர்காணல் வழங்கி யிருந்ததாக குற்றம் சுமத்தபட்டிருந்தது.

பாதுகாப்பு செயலாளருக்கும், நாட்டுக்கும் களங்கத்தை உருவாக்கும் விதத்தில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிட் டிருப்பதாக குற்றம் சுமத்தபட்டிருந்தது.இந்த வழக்கை விசாரணைசெய்த நீதிபதிகள் சரத்பொன்சேகா குற்றவாளி என்று தீர்மானித்து 36 மாதகால சிறைத்தண்டனை_விதித்துள்ளது.

Tags:

Leave a Reply