ஸ்ரீ ராமுலுவை மீண்டும் பாரதிய ஜனதாவில் சேர்த்துகொள்ள முடியாது என முதல்வர் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார் .

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : கட்சியைவிட்டு விலகிய முன்னாள் அமைச்சர் பி.ஸ்ரீராமுலு, இடைதேர்தலிலும் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவரை மீண்டும் பாரதிய ஜனதாவில் சேர்த்துகொள்ளும் கேள்விக்கே இடமில்லை. பாரதிய ஜனதா தயவால்

மக்களுக்குசேவையாற்றும் வாய்ப்பு ஸ்ரீ ராமுலுவுக்கு கிடைத்தது.

இடைதேர்தலில் ஸ்ரீ ராமுலுவுக்கு ஆதரவாக பிரசாரம்செய்துவரும் பாரதிய ஜனதா எம்எல்ஏகள் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கபடும். கட்சிக்கு_எதிராக செயல் படும் நபர்களுடன் எவ்வித சமரசதிற்கும் கட்சி தயாரில்லை.

தனி நபர்களை காட்டிலும் கட்சியேபெரியது. பாரதிய ஜனதா வேட்பாளர் காதிலிங்கபாவின் வெற்றிக்காக மாநிலதலைவர் கேஎஸ்.ஈஸ்வரப்பா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா போன்றோர் வியூகம் அமைத்து செயல்படுகின்றனர் , பெல்லாரி ஊரகதொகுதியை பாரதிய ஜனதா தக்கவைத்துகொள்ளும். பெல்லாரி ஊரகதொகுதியில் கட்சியின்பலத்தை வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply