செல்போன்கள் மற்றும் செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும்கதிர்வீச்சை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதுகுறித்த புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கபட உள்ளன. இதற்கு ஏற்ப செல்போன்சாதனங்களை நிறுவனங்கள் வடிவமைக்கவேண்டும். இதனை யடுத்து, செல்போன் விலை குறைந்தபட்சம் ரூ.400-க்கு மேல் அதிகரிக்கும்

.

செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை மதிப்பிடும் அளவு கோலுக்கு சுய கதிர்வீச்சு விகிதம் (எஸ்.ஏ.ஆர்) என்று பெயர். இது, ஒருவர் செல்போனை பயன்படுத்தும்போது அவரது உடலுக்குள் செல்லும் ரேடியோ அலைகளின் அளவை தெரிவிக்கிறது. இது, ஒவ்வொரு செல்போனிலும் வெவ்வேறு விதமாக இருக்கும்.

ஒரு செல்போனிலிருந்து இந்த அளவிற்குதான் கதிர்வீச்சு வெளியாக வேண்டும் என்ற விதிமுறைகள் இன்னும் நம் நாட்டில் முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை. இது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவில், சுய கதிர்வீச்சு விகிதம் ஒரு கிலோவுக்கு 1.6 வாட்ஸ் ஆக உள்ளது. இது, ஐரோப்பாவில் ஒரு கிலோவுக்கு 2 வாட்ஸ் ஆக உள்ளது. இந்த ஐரோப்பிய அளவுகோல்தான் நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது, கட்டாய சட்டமாக இல்லை.
அமெரிக்கா

இனிமேல் அமெரிக்காவைப் போன்று, இந்தியாவிலும் செல்போன்களில் சுய கதிர்வீச்சு விகிதம் 1.6 வாட்சுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது.

Tags:

Leave a Reply