மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நாடாளு மன்றத்தில் பேச அனுமதிக்கமாட்டோம் என பா ஜ க தெரிவித்துள்ளது.

தில்லியில் இருக்கும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானியின் வீட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் திங்கள் கிழமை நடை பெற்றது. இந்த கூட்டத்தில்

ப.சிதம்பரத்துக்கு எதிரானமுடிவு எடுக்கபட்டதாக மாநிலங்களவை எதிர்கட்சி துணை தலைவர் எஸ் எஸ்.அலுவாலியா தெரிவித்தார் .

2ஜி அலைகற்றை ஊழலில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை போன்று ப.சிதம்பரத்துக்கும் சரி பங்குண்டு. ஆ.ராசாவின் ராஜிநாமாகடிதத்தை ஏற்றுகொண்ட பிரதமர், இதுவரை சிதம்பரத்தை ராஜிநாமா செய்யகூட கோரவில்லை. இது கண்டனத்துக்குரியது. இனிமேலும் இதை நாங்கள் பொறுத்துகொள்ள மாட்டோம். ப.சிதம்பரம் தனது பதவியை ராஜிநாமா செய்யும்வரை அவரை நாங்கள் நாடாளு மன்றத்தில் பேச அனுமதிக்கமாட்டோம் என அலுவாலியா தெரிவித்தார்.

Tags:

Leave a Reply