தில்லி மாநகராட்சி_மையத்தில் சீக்கிய இளைஞர் ஒருவர் மத்திய அமைச்சர் சரத்பவாரை திடீர் என்று கன்னத்தில் அறைந்தார்.

போலீசார் உடனடியாக அந்தஇளைஞரைக் கைதுசெய்தனர். நாட்டில் நடைபெறும் பல்வேறு ஊழல்களினால் வெறுப்படைந்ததால் அமைச்சரை

அறைந்ததாக அவர் தெரிவித்தார் .

இதை நான் விளம்பரத்துக்காக செய்யவில்லை , இன்று நான் குறுவாளை மட்டும் எடுத்து வந்திருந்தால் அவரைகொன்றிருப்பேன் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார் .அமைச்சரை அறைந்ததற்காக ஏற்படும் பின் விளைவுகளை பற்றி நான் கவலைபடவில்லை. முன்னாள் அமைச்சர் சுக்ராமையும் நான்தான் சனிகிழமையன்று அடித்தேன் என்று அவர் தெரிவித்தார். திடீரென பவாரை ஒருவர் கன்னத்தில் அடித்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

{qtube vid:=B9_RYzkbta8} {qtube vid:=fvs0CNUu-2s}

Tags:

Leave a Reply