நாட்டில் எந்தபகுதியில் அமெரிக்காவின் வால்மார்ட் விற்பனையகத்தை தொடங்கினாலும் அதைதீயிட்டு கொளுத்த போவதாக உமா பாரதி தெரிவித்துள்ளார் .

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விதமாக மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது . இதைகண்டிக்கும் விதமாக

அவர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் பொது கூட்டங்களில் ராகுல்காந்தி, அம்மாநிலத்தின் நிலை குறித்து கோபமடைவதாக கூறுவது முதலை கண்ணீர் என உமா பாரதி குறிப்பிட்டார்.

தலித்துகள் மற்றும் ஏழைகளின் மீது ராகுலுக்கு அக்கறை இருக்கு மேயானால் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் வரத்தைதடுக்கலாமே என்றார்.

Leave a Reply