உ. பி யில் நான் முதலவ ராக இருக்கும் வரை, சில்லறை வர்த்தகதில் அன்னியநேரடி முதலீடை அனுமதிக்க மாட்டேன்’ என மாயாவதி உறுதிபட அறிவித்தார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது: “”மத்திய அரசு இந்தமுடிவை உடனடியாக திரும்பபெறவேண்டும். அன்னிய நிறுவனங்கள் பலன

அடையவும், கிழக்கிந்திய கம்பெனி_ஆட்சி செய்து கொண்டிருந்த போது நிலவிய அடிமை சூழலுக்கு நாட்டை இட்டுசெல்லவுமே மதிய அரசு இப்படி யொரு முடிவை_எடுத்துள்ளது.

காங்கிரஸ் இளவரசர் ராகுல்காந்தி வெளி நாட்டிலேயே படித்து_வளர்ந்தவர். எனவே அவருடைய சிந்தனை வெளிநாட்டு_சூழலின் அடிபடையிலேயே இருக்கும். எனவே தான் எப்போதெல்லாம் உத்தர பிரதேசத்துக்கு வருகைதருகிறாரோ, அப்போதெல்லாம் தனது வெளிநாட்டு_நண்பர்களை உடன் அழைத்துவருகிறார். பொழுது போக்காகவும், ஓய்வுகாகவும் இங்குள்ள குடிசைகளுக்கு அவர்களை அழைத்துசெல்வதுடன் அவர்களின் ஏழ்மையை கேலிசெய்கிறார் என்று தெரிவித்தார் .

Tags:

Leave a Reply