நான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்டி வரும். எனவே தரப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கபோவதில்லை. முதலில் கனிமொழி வெளியில்வரட்டும். பிறகு நான் ஜாமீன்_பற்றி யோசிக்கிறேன், என ஆ ராசா கூறியுள்ளார்.

மேலும் ஆ.ராசா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது .

திகார் சிறை வாழ்க்கை, தொழில் ரீதியாகவும் தனிபட்ட வகையிலும் என்னை மேலும்_செம்மையாக்கியுள்ளது.

நான் தற்காலிகமாக விடுதலையாக விரும்பவில்லை. இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுதலைபெற வேண்டும் என்பது தான் எனதுநோக்கம். எனவே நான் ஜாமீன்கேட்டு எந்த கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்யவில்லை. நான் வாயை திறக்கும்போது, பலர் ஜெயிலுக்கு போகவேண்டி வரும் .

ஒவ்வொரு விஷயதையும் நான் கவனித்துகொண்டு தான் இருக்கிறேன். நிரந்தரமாகவே நான் ஜெயிலிலேயே இருந்துவிடுவேன் என நீங்கள் கருதிவிடக்கூடாது. முதலில் கனிமொழிக்கு ஜாமீன்_கிடைக்கட்டும், அவர் முதலில் சிறையிலிருந்து விடுதலையாகட்டும். அதற்க்கு பிறகுஜாமீன் மனு தாக்கல் செய்வதை பற்றி நான் யோசிக்கிறேன்,” என்று தெரிவித்ததார்

Leave a Reply