இளைஞர் காங்கிரசின் இரண்டு நாள் மாநாடு இன்றுதொடங்கியது. இந்தமாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளா, ஒரிசா, பீகார், குஜராத், மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களை சேர்ந்த இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டை இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுல் காந்தி

தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஊழலை பற்றி எல்லோருமே பேசுகிறோம். அரசியலில் உள்ளே தான் மிகபெரிய ஊழல் நடைபெறுகிறது . இந்த_ஊழலை ஒழிக்க இளைஞர் கள் பெருமளவில்_அரசியலுக்கு வர வேண்டும். இளைஞர்கள் வந்தால்தான் ஊழல் இல்லாத அரசியலை உருவாக்கமுடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார் .

இளைஞர்கள் பெருமளவில் அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, அதே நேரத்தில் உங்கள் கட்சியில் இருப்பவர்களில் பெரும்பாலோனர் முதியவர்கள் என்பதிலும் எந்த மாற்று கருத்தும் இல்லை,

இளைஞராகிய (40 வயதில்) உங்கள் தந்தை ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த பொழுதுதான் இந்திய மக்களை அதிரவைத்த போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நடைபெற்றது , ஆனால் முதியவராகிய (72 வயதில்) எங்கள் தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது எந்த ஊழலிலும் சிக்கவில்லையே.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply