சமூக இணைய தளங்களில் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய அரசியல் தலைவர்கள் பிரிவில் குஜராத்_முதல்வர் நரேந்திரமோடியின் பெயர் 5வது மேஷபிள் விருது 2011க்கு பரிந்துரைக்கபட்டுள்ளது. இந்தபிரிவில் பரிந்துரைக்கபட்டிருக்கும் அமெரிக்கர் அல்லாத ஒரேநபர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்முதல்வர் நரேந்திரமோடி தினமும் தான் என்ன_செய்கிறோம் என்பதை பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் தெரிவிக்கும்_பழக்கம் உடையவர் . இதுதவிர தனது கருத்துகளை தன்னுடைய_பிளாக்கில் தவறாமல் பதிவுசெய்துவிடுவார். குஜராத் அரசு மற்றும் பாரதிய ஜனதாவின் நிகழ்வுகளை அவ்வபோது தெரிவிப்பவர்.

சமூக இணையதளங்களில் சிறப்பாக செயல்படும் அரசியல்வலாதிகளுக்கான விருதுபிரிவில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி யின் பெயர் பரிந்துரைக்கபட்டுள்ளது. இதேபிரிவில் அமெரிக்க அதிபர் பாரக்ஒபாமா, கோரிப்ரூக்கர், ரான்பால், பட்டிரோமர் மற்றும் பெர்னிசான்டர்ஸ் போன்றோரின் பெயர்களும் பரிந்துரைக்கபட்டுள்ளது.

இந்தவிருதுக்காக நீங்கள் யாருக்காவது வாக்களிக்க_விரும்பினால் வரும் டிசம்பர் 16ம் தேதிக்குள் வாக்கை ஆன்லைனில் பதிவுசெய்யுங்கள். வெற்றி பெற்றவர்கள் வரும் டிசம்பர் 19ம்_தேதி அறிவிக்கபடுவார்கள்.

http://mashable.com/follow/contests/mashable-awards-2011/?category=must-follow-politician-on-social-media&nominee=Narendra%20Modi

Tags:

Leave a Reply