இங்கிலாந்தில் இருந்து,,

கிழக்கிந்திய கம்பெனி இப்படிதான் வியாபாரத்திற்காக வந்து,,

பிறகு நாட்டையே பிடித்தார்கள்..

அதையே திரும்பவும்,,

நம் மத்திய அரசு செய்கிறது,,,

கொஞ்சம் கூட தைரியம் இல்லாத அரசு ,,

கடந்த 60 ஆண்டுகளில் இந்த அரசுதான்,,

அமெரிக்க கம்பெனிகளுக்கும் பயம்,,

தம்மாதுண்டு இலங்கை இனவெறி அரசுக்கும் பயம்,,

சீனாவிற்கும் பயம்,,

பக்கத்திலிருக்கும் பாகிஸ்தானுக்கும் பயம்,,

வங்கதேசத்திற்கும் பயம்,,

ஒரு வல்லரசாக இருந்து அக்கம் பக்கம் உள்ள நாடுகளை..

தன் கைக்குள் வைக்க தெரியாத ஒரே நாடு இப்போதைக்கு நம் நாடுதான்,,

வீர சிவாஜியும்,, வீர பாரதியும்,,

பகத் சிங்கும்,, பெரியாரும்,,

நேதாஜி சுபாஷ் சந்திர போசும் ,,

வாழ்ந்த இந்த திருநாட்டில்,,,

தைரியமற்ற கோழைத்தனமான அரசு ஆண்டுகொண்டு இருக்கிறது,,

இப்போது…

நெஞ்சு பொறுக்குதில்லையே ,,

இந்த அரசை நினைத்து விட்டால்..

சில்லறை வணிகத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவன முதலீட்டை எதிர்க்கும் ,, அதே வேளையில்..

இங்குள்ள சில்லறை வணிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

அரசுக்கு சரியான வருமான வரி கட்டவும்,,

தயவு செய்து வாடிக்கையாளர் மனம் நோகும்படி நடக்க வேண்டாம்…

 

நன்றி Aravind Ramaswamy

Tags:

Leave a Reply