சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு_தொடர்பாக ஒத்திவைபு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு பாரதிய ஜனதா தலைவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி_முதலீடுகளை அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கு பாரதிய

ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும்கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து_வருகின்றன.

இந்தநிலையில் பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்திற்கு பிறகு அத்வானியும், சுஷ்மாசுவராஜும் செய்தியாளர்களுகு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில் , சில்லரை வர்த்தகத்தில் அன்னிய_முதலீடு குறித்து பாராளுமன்றத்தில் ஒத்திவைபு தீர்மானத்தை அரசு சந்திக்கவேண்டும். அல்லது அந்தமுடிவை அரசு வாபஸ்பெற வேண்டும் என கூறினர்.

அரசு தனதுமுடிவை வாபஸ் பெறுவதற்க்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை. எனவே பாராளுமன்றதில் ஒத்திவைபு தீர்மானத்தை கொண்டு வருவதென பாரதிய ஜனதா தீர்மானித்துள்ளது. இந்தஒத்திவைப்பு தீர்மானத்தை பாரதிய ஜனதா மூத்த_தலைவர் முரளி மனோகர் ஜோஷி கொண்டுவருவார் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags:

Leave a Reply