சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப_பக்தர்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர வேண்டும் என பா ஜ க மாநில_தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது முல்லை பெரியாறு பிரச்னையை வைத்து தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் வாகனங்கள் தாக்கப்படுவது

உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அதற்கு தயாராக இல்லாத_நிலையில் தேசிய ஒருமைபாட்டுக்கு குந்தகம் விளைவிபோருக்கு துணை போகும் கேரள அரசைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

கேரளத்தில் நடைபெற இருக்கும் பிரவம் இடைதேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற் காகவே முதல்வர் உம்மன்_சாண்டியும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அச்சுதானந்தனும் நடத்தும் அரசியல்நாடகமே இவை என்பதை கேரள_மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார் .

Tags:

Leave a Reply